ஏழை மாணவர்களுக்கு உதவி கரம் நீட்டும் சோனு சூட்…

ஏழை மாணவர்களுக்கு உதவி கரம் நீட்டும் சோனு சூட்…

ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவுவதாகவும், மாணவர்கள் தங்கள் தகவல்களை மெயில் அனுப்புமாறும் பாலிவுட் நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நிதி சிக்கலால் நன்றாக படித்து சாதிக்க வேண்டுமென்ற பெரிய கனவுகளையும், லட்சியங்களையும் கொண்டிருக்கின்ற எந்தவொரு மாணவரது கல்வியும் பாதிக்கப்படக்கூடாது என நான் நினைக்கிறேன். அதனால் அது மாதிரியான மாணவர்களது உயர்கல்விக்கான முழு செலவையும் உதவித்தொகையாக கொடுக்க உள்ளேன்.

ஆர்வமுள்ளவர்கள் [email protected] என்ற மெயில் ஐடிக்கு உங்களது விவரங்களை அடுத்த பத்து நாட்களுக்குள் அனுப்பவும். நான் உங்களை தொடர்பு கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்