தமிழில் ரீ-மேக்காகும் தியா படம்…

தமிழில் ரீ-மேக்காகும் தியா படம்…

கன்னட மொழியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தியா. அம்பார், குஷி, தீக்‌ஷித் நடிப்பில் கே.எஸ்.அசோகா இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இப்படத்தின் மற்ற மொழிகளில் ரீ-மேக் செய்யவுள்ளதாக அவ்வபோது சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இதற்கிடையில் தியா படத்தின் ரீமேக் உரிமையை பல்வேறு மொழிகளை சேர்ந்த தயாரிப்பாளர்கள் கேட்டு வருவதாகவும் ஆனால் இதுகுறித்து தியா படத்தயாரிப்பாளர் கிருஷண சைதன்யா இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியிருந்தார்

இந்நிலையில் தற்போது தியா படம் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி குதிரைவால் படத்தை இயக்கிய மனோஜ் லியோனல் ஜாசன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகையர் தொழிநுட்ப குவி என அனைத்து விவரமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்