ஓடிடியில் வெளியாகிறதா விஜய்யின் மாஸ்டர்?

ஓடிடியில் வெளியாகிறதா விஜய்யின் மாஸ்டர்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய்- விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார். 

இப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளி போகியுள்ளது. ரசிகர்கள் இந்த படம் எப்போது வரும் என காத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு இப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது.

மேலும், இப்படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. சில மாதங்களுக்கு முன்னர் மாஸ்டர் பட டிஜிட்டலில் ஓடிடி முறையில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகின ஆனால் அதற்கு தயாரிப்பாளர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு தொடர்ந்து வருகிறது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் திரையரங்குகள்  திறப்பதில் குழப்பம் நீடிப்பதால் விஜய் நடித்த மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மாஸ்டர் படக்குழு அமேசான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளாது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்