போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கிய ரகுல் ப்ரீத் சிங்… நடிகையின் பரபரப்பு வாக்குமூலம்

நடிகை ரியா சக்ரபர்த்தி விசாரணையின் போது ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான் பெயர்களை கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையக திகழ்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ரகுல் ப்ரீத் சிங் தமிழில் சூர்யாவின் என்.ஜி,கே படத்தின் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் தற்போது கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சகரபர்த்தி போதை பொருள் சர்ச்சையில் கைது செய்யப்பட்டிருகிறார். இதனை தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் பாலிவுட்டின் முன்னனி பிரபலங்கள் பலர் பெயர்களை கூறி இருப்பதாக தகவல் வெளியுள்ளது. அதில் ரகுல் ப்ரீத் சிங் பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் 25 A லிஸ்டர் பாலிவுட் பிரபலங்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் என பலரது பெயர்கள் அதில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இதில் பாலிவுட் நடிகை சாரா அலி கான் பெயரையும் ரியா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் பிரபல நடிகர் சைப் அலி கானின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பிரபல நடிகர், நடிகைகள் பெயர் தொடர்ந்து போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு