வைரலாகும் வனிதா - பீட்டர் பால் ரீசன்ட் பிக்….
நடிகை வனிதா விஜய்குமார் தனது கணவர் பீட்டர் பாலுடன் சிறப்பு பூஜை செய்த போட்டோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை வனிதா விஜயகுமார் சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்டார். பீட்டர் பாலுக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவியும் குழந்தையும் உள்ளனர்.
இதற்கிடையில் பீட்டர் பால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக கூறி பெரும் சர்ச்சை கிளம்பியது. இது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகி மாறியது.
இந்நிலையில் சமீபத்தில் பீட்டார் பால் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை முடிந்து பீட்டர் பால் வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார் வனிதா. இதில் இரண்டு மகள்களுடன் வனிதா, பீட்டர் பால் இருவரும் கழுத்தில் பண மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இந்த போட்டோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த போட்டோவை வெளியிட்டு, “தனது லட்சுமி குபேர பூஜை நடந்ததாகவும் 2020 ஆம் ஆண்டின் இனி வரக்கூடிய மாதங்களாவது அனைவருக்கும் நல்லதாக இருக்கட்டும் என்றும் இந்த ஆண்டை தன்னால் மறக்கவே முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு