சோனியா காந்தியை தாக்கி கங்கனா ரனாவத் பரபரப்பு ட்வீட்…

சோனியா காந்தியை தாக்கி கங்கனா ரனாவத் பரபரப்பு ட்வீட்…

மும்பையில் சிவசேனா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மும்பை காஷ்மீர் போன்றது என்றும், தனக்கு மும்பையில் பாதுகாப்பு இல்லை என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார். இது சிவ சேனா கட்சியினர் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அத்துடன் பிரபலங்கள் பலரும் கங்கனாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதன் பின்னர் கங்கனா செப்டம்பர் 9ம் தேதி மும்பை வருவதாக தெரிவித்து முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று சாவல் விட்டார். அதன்படி மத்திய அரசி ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்புடன் மும்பை வந்தார். 

அவர் மும்பை வந்த சில மணி நேரத்தில் நடிகை கங்கனா ரனாவத்திற்கு சொந்தமான கட்டடத்தை மும்பை மாநகராட்சி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி இடித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கங்கனா தலைவர் சோனியா காந்தியை தாக்கி பேசும் வகையில் வரலாறு தான் உங்களது மவுனத்தை தீர்மானிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”மதிப்பிற்குரிய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு வணக்கம். ஒரு பெண்ணாக உங்களது கூட்டணி ஆட்சியினரால் எனக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை கண்டு உங்களுக்கு கோபம் வரவில்லையா.  டாக்டர் அம்பேத்கர் நமக்கு கொடுத்துள்ள இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் நியதியையும் நிலைநிறுத்த உங்களது ஆட்சியாளர்களிடம் நீங்கள் வலியுறுத்தக் கூடாதா. 

நீங்கள் மெற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்திருந்தாலும் இந்தியாவில் தான் வாழ்ந்து வருகிறீர்கள். உங்களுக்கு ஒரு பெண் அவளது வாழ்வில் எதிர்கொள்ளும் போராட்டங்கள் என்னவென்று தெரியாதா? சட்டத்தை கைகளில் எடுத்துக் கொண்டு பெண்களை துன்புறுத்துகிறார்கள். வரலாறு தான் உங்களது மவுனத்தை தீர்மானிக்க வேண்டும். நிச்சயம் நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிடுவீர்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.04%
 • அனுபவக் குறைவு
  24.51%
 • கிரிக்கெட் அரசியல்
  35.8%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.64%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்