தினமும் மாட்டுக் கோமியத்தை குடிப்பேன்… அக்ஷய் குமார் ஓபன் டாக்

தினமும் மாட்டுக் கோமியத்தை குடிப்பேன்… அக்ஷய் குமார் ஓபன் டாக்

பாலிவுட் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அக்ஷய் குமார் தினமும் மாட்டுக் கோமியத்தை குடிப்பதாக தெரிவித்துள்ளார். 

உலகப் புகழ் பெற்ற டிஸ்கவரி சேனலில் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் காட்டுப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து உயிர் பிழைத்து தப்பிப்பது என்பதை ஆவணப்படுத்தி வெளியிடப்படும். 

இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிடோர் பங்கேற்றனர்.இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் ஹிந்தி பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் டீஸர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதில் பியர் கிரில்ஸ் தனக்கு யானை சாணத்தில் டீ போட்டுக் கொடுத்ததாக அக்ஷய் குமார் தெரிவித்தார்.

இந்நிலையில் பியர் கிரில்ஸ் அக்ஷ்ய குமார் மற்றும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி சமீபத்தில் லைவ் வந்தபோது யானை சாணத்தில் போட்ட டீயை எப்படித் தான் குடித்தீர்களோ என்று ஹூமா கேட்டார்.

அதற்கு அக்ஷய் குமார் ”நான் தினமும் மாட்டுக் கோமியம் குடிப்பதால் யானை சாண டீ எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை என்றும் ஆயுர்வேத காரணங்களுக்காக தான் தினமும் கோமியத்தை குடிப்பதாக” கூறினார். 

அக்ஷய் குமாரின் இந்த பதில் பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்