போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகை ரியாவுக்கு ஜாமீன் மறுப்பு

போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகை ரியாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ரியா சக்ரவர்த்தியிடம் சிபிஐ விசாரித்து வருகிறது. சுஷாந்த்தின் பணத்தை ரியா சட்டவிரோதமாக கைமாற்றியதாகவும் பணமோசடியில் ஈடுப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் ரியாவுக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு உள்ளதாக அவரின் செல்போனில் பேசிய உரையாடல் மூலம் தெரியவந்தது. இதுதொடர்பாக போதை பொருள் தடுப்புபிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் 3வது நாளாக மும்பையில் உள்ள என்சிபி அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜாரானார். அப்போது அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுதொடர்பாக ரியாவின் வழக்குரைஞர் கூறுகையில், “தனக்கு இருந்த மனநல பிரச்சனைகளுக்கு சட்ட விரோதமாக உட்கொண்ட மருந்துகள், போதைப்பொருள் பயன்படுத்தி வந்தது ஆகியவற்றால்தான் சிஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இந்த சம்பவத்தில் ரியா கைது செய்யப்பட்டுள்ளார். இது முற்றிலும் நீதிக்கு புறம்பானது” என்று தெரிவித்தார்.
இதற்குமுன்னர் போதைப் பொருள் விநியோகம் தொடர்பான குற்றச்சாட்டில் ரியாவின் சகோதரர் ஷோவிக், சுஷாந்தின் மேலாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோரை என்சிபி அதிகாரிகள் ஏற்கெனவே கைது செய்தனர்.
இந்நிலையில் போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ரியா அவருடைய சகோதரர் மற்றும் நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்க மும்பை சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
28.09% -
அனுபவக் குறைவு
24.56% -
கிரிக்கெட் அரசியல்
35.69% -
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
11.66%