வீட்டிற்கு பின்னால் பூந்தோட்டம் வளர்த்த அஜித்… இத்தனை வகை செடியா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

வீட்டிற்கு பின்னால் பூந்தோட்டம் வளர்த்த அஜித்… இத்தனை வகை செடியா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நாட்களை சமாளிக்க முடியாமல் மக்கள் அதிகம் சிரமப்பட்டனர். 

இதற்கிடையில் இந்த நாட்களில் பிரபலங்கள் தங்கள் குடும்பத்துடன் இருந்தனர். இந்நிலையில் தமிழின் முன்னணி நடிகரான அஜித்தோ ஒரு புதிய பொழுது போக்கு வழியை கண்டுபிடித்துள்ளார்.

அஜித் ஏற்கெனவே பைக், புகைப்படக்கலை, துப்பாக்கிச்சுடுதல், சமையல், ட்ரோன் என தனக்குப் பிடித்த விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது புதிதாக பூந்தோட்டம் வளர்க்கத் தொடங்கியுள்ளார். இவர் தனது வீட்டுக்குப் பின்புறத்தில் வைத்துள்ள தோட்டத்தில் 75 வகையான பூக்கள் மற்றும் மூலிகைச் செடிகளை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வலிமை படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் வீட்டில் ஓய்வாக இருந்த அஜித் நேரத்தை வீணடிக்காமல் பூந்தோட்டம் வளர்த்துள்ளார். இதற்கிடையில் கொரோனா பரவல் ஓரளவுக்கு முடிவுக்கு வந்ததும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்