பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்..!

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்... ரசிகர்கள் அதிர்ச்சி..
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பெரிதும் பாராட்டத்தக்கவர். 
இந்த நிலையில், பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் ஐசியு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
    63.48%
  • இல்லை
    27.83%
  • யோசிக்கலாம்
    4.97%
  • கருத்து கூற விரும்பவில்லை
    3.73%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்