கொரோனாவில் இருந்து மீண்ட ராஜமவுலியின் குடும்பம்….

பாகுபலி திரைப்பட இயக்குநர் எஸ் எஸ் ராஜமவுலியும் அவரது குடும்பத்தினரும் கொரோனாவில் இருந்து மீண்டிருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் முன்னணி பிரபலங்களும் அடங்குவர். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு பிறகு தற்போது அதில் இருந்து மீண்டுள்ளனர்.
அதேபோல் லேசான அறிகுறிகளுடன் பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி தனது குடும்பத்துடன் கடந்த மாதம் 29ம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இரு வாரங்களாக வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
இந்நிலையில் மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா நீங்கியிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ராஜமவுலி தனது ட்விட்டர் பக்கத்தில், “தனிமைப்படுத்தப்பட்ட 2 வாரங்கள் முடிந்தது. அறிகுறிகள் இல்லை. அதனால் பரிசோதனை செய்து கொண்டோம். எங்கள் எல்லோருக்கும் நெகட்டிவ் என்று வந்துள்ளது. பிளாஸ்மா நன்கொடை வழங்க 3 வாரங்கள் காத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு