சுஷாந்த் காதலி என்று மும்பையை சேர்ந்த நபர் ஒருவருக்கு தொல்லை…

சுஷாந்த் காதலி என்று மும்பையை சேர்ந்த நபர் ஒருவருக்கு தொல்லை…

சுஷாந்தின் காதலி என நினைத்து மும்பையை சேர்ந்த நபரின் செல்போன் எண்ணுக்கு 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் சென்றதால் அந்த நபர் தொல்லைக்கு ஆளாகியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கை சிபிஐ போலீஸ் விசாரித்து வருகிறது. மேலும் சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில், அவரது காதலியான ரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

இதற்கிடையில் தொலைக்காட்சி ஒன்றில் சுஷாந்துக்கு வந்த தொலைபேசி அழைப்பு குறித்து காண்பிக்கும் போது ரியாவின் செல்போன் எண் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நம்பரை பலரும் தொடர்புகொண்டுள்ளனர். 

இதனால் மும்பையை சேர்ந்த நபர் ஒருவருக்கு தொல்லையாகியுள்ளது. ரியாவின் செல்போன் எண்ணுக்கும் அந்த மும்பை நபரின் செல்போன் எண்ணுக்கும் ஒரு நம்பர் தான் வித்தியாசம். இதனால் நூறுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் அவருக்கு வந்துள்ளன. தொடர் அழைப்புகளால் சோர்ந்து போன மும்பை நபர் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளார்.

இதுகுறித்து அந்த நபர் கூறுகையில், ”முதலில் பல மெசேஜ்கள் வந்தன, பின்னர் வாட்ஸ் அப்புக்கு வீடியோ கால்கள் வந்தன. அத்துடன் தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது. எனக்கும் ஒன்றுமே புரியவில்லை. பின்புதான் டிவியில் ரியாவின் எண் காண்பித்ததும் அவருடைய எண்ணும் என் எண்ணுக்கும் ஒரு நம்பர் தான் வித்தியாசம் என்பதால் இந்த தொல்லை என்பதும் புரிந்தது” என்று தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்