ஓடிடி தளத்திலிருந்து சூர்யா படம் நீக்கம்… காரணம் இதுதான்…

ஓடிடி தளத்திலிருந்து சூர்யா படம் நீக்கம்… காரணம் இதுதான்…

ஓடிடி தளத்திலிருந்து சூர்யாவின் 24 படம் நீக்கப்பட்டதற்கு காரணம் என்னவென்று தற்போது வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 24. கடந்த 2016ஆம் ஆண்டு மே 6ம் தேதி வெளியானது. இப்படத்தில் நித்யாமேனன், சமந்தா, சரண்யா பொன்வண்ணன், மற்றும் பலர் நடித்திருந்தனர். ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் தயாரிப்பு வடிவமைப்பு சிறந்த ஒளிப்பதிவு என இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது. இந்நிலையில் இந்த படம் கடந்த ஜூலை 16ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓட்டி தளத்தில் வெளியானது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் திடீரென நேற்று (ஆகஸ்ட்0 10) 24 படம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதுதொடர்பாக வெளியான செய்திகளில் 24 படம் வெளியானதிலிருந்து படத்தின் ஆடியோவை பிரச்சினை இருந்ததாகவும் பலரும் இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த படத்தை  தேடி பார்ப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்கிரீன்ஷாட் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.

இதனால் இந்த படத்தில் உள்ள ஆடியோ பிரச்சனையை சரி செய்த பின்னர் வெளியிடலாம் என்ற எண்ணத்தில் தான் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.09%
 • அனுபவக் குறைவு
  24.56%
 • கிரிக்கெட் அரசியல்
  35.69%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.66%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்