சத்யா பாடல் மறு ஆக்கம்… நெகிழ்ச்சியில் உலகநாயகன்…

சத்யா பாடல் மறு ஆக்கம்… நெகிழ்ச்சியில் உலகநாயகன்…

சத்யா பாடலை மறு ஆக்கம் செய்து வெளியிட்டது குறித்து கமல் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 1960ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியான களத்தூர் கண்ணம்மா மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனால் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலக நாயகன் கமலஹாசன் திரையுலகிற்கு அறிமுகமாகி 61 ஆண்டு காலமாகிறது. இதனை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் தயாராகி வருகின்றன.

அந்தவகையில் சத்யா படத்தில் இடம்பெற்ற போட்டா படியுது என்ற பாடலை மறு ஆக்கம் செய்து வெளியிட்டுள்ளனர். இதில் முக்கியமான விஷயம் என்வென்றால் சத்யா பாடல் உண்மையில் எங்கு படம் பிடிக்கப்பட்டதோ அங்கு தான் இதன் மறு ஆக்க பாடலும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதனை சிம்பா பட இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கியுள்ளார். இதனை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

இந்த வீடியோவால் நெகிழ்ச்சி அடைந்த கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்வீட்டை மேற்கோள்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில்,” நான் நெகிழ்ந்துவிட்டேன். இது வெறுமனே ஒரு பழைய அழகான நினைவு மாதிரி தெரியவில்லை. இது நிபந்தனையற்ற அன்பு. இதற்காக நான் திருப்பி தர வேண்டியது பரிசும் அதே மாதிரியான அன்பு மட்டுமே. உங்களுடைய அன்புக்கு நன்றி. என்னை நீங்கள் ஓட அனுமதித்திருக்கும் ஓட்டப்பந்தயத்தில் எனக்காக ஊக்கம் இதுதான். என் நீண்ட பயணத்தில் என்னை அயர்வின்றி நடத்தும் சக்தியும் அதுதான்” என்று தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.48%
 • இல்லை
  27.83%
 • யோசிக்கலாம்
  4.97%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.73%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்