விஜய், சூர்யா வாழ்க்கை அழகிய ஓவியங்கள்… மீரா மிதுனுக்கு பாரதிராஜா கண்டனம்

விஜய், சூர்யா வாழ்க்கை அழகிய ஓவியங்கள்… மீரா மிதுனுக்கு பாரதிராஜா கண்டனம்

நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதாக நடிகை மீரா மிதுனுக்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழில் சில படங்களில் நடித்திருந்த மீரா மிதுன், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். இவர் அவ்வபோது சர்ச்சையான கருத்துகளை வெளியிடுவது வழக்கம். 

அந்த வகையில் தமிழ் சினிமாவில் நெப்போட்டிஸம் பெரிய அளவில் உள்ளது என்றும் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா நெப்போட்டிஸத்தின் தயாரிப்புகள் என்று மீரா மிதுன் விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் கோபமடைந்த விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை இணையதளத்தில் கடுமையாக விமர்சித்தனர்.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் மனைவி சங்கீதா மற்றும் சூர்யா மனைவி ஜோதிகா ஆகியோரையும் அவதூறாக பேசி மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் சூர்யா, விஜய் ரசிகர்கள் மிரட்டுவதாகவும், தனக்கு ஏதாவது நடந்தால் நடிகர் சூர்யா மற்றும் விஜய் தான் பொறுப்பு என்றும் தனக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது போலீஸில் புகார் அளிப்பேன் என்று மீரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசியதற்கு நடிகை மீரா மிதுனுக்கு இயக்குநர் பாரதி ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நடிகர்கள் விஜய், சூர்யா, ஆகியோரின் கண்ணியமான வாழ்க்கை நம் முன்னே கண்ணாடி போல இருக்கிறது.மனிதாபிமான பணிகளை சத்தமில்லாமல் விஜய்யும் மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் பணியை சூர்யாவும் செய்து வருகின்றனர். அழகிய ஓவியத்தின் மீது சேறு பூசுவது போல சிலர் பேசுவது கண்டனத்துக்குரியது. நடிகர் சங்கம் உள்ளிட்ட எந்த சங்கமும் விஜய் மற்றும் சூர்யா பற்றி விமர்சிப்பவரை கண்டிக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது என்று கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்