பர்த்டே சர்ப்ரைஸ்… ஷாக்கில் ஹன்சிகா…

பர்த்டே சர்ப்ரைஸ்… ஷாக்கில் ஹன்சிகா…

ஒரு நட்சத்திரத்திற்கு ஹன்சிகாவின் பெயரை ரசிகர்கள் பதிவு செய்து அவரது பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருடைய பிறந்தநாளுக்கு உறவினர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்தினர்.

இந்நிலையில் அவரது பிறந்த நாளை சிறப்புவிக்கும் வகையில் அவருக்கு சிறந்த பரிசாக நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் ஒரு நட்சத்திரத்திற்கு ஹன்சிகா மோத்வானி என்ற பெயரை அவரது ரசிகர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து ஹன்சிகா தனது இணையப்பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நட்சத்திரங்கள் மீது நான் எவ்வளவு பைத்தியம் என்று உங்களுக்கு தெரியும். நல்ல குடும்பம் மற்றும் நண்பர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவள் நான். என் பெயரை ஒரு நட்சத்திரத்திற்கு பதிவு செய்ததை விட வேறு ஒரு சிறந்த பிறந்தநாள் பரிசை நான் எதிர்பார்க்க முடியாது. இதைச் செய்த அனைவருக்கும் எனது நன்றி. ஒரு நட்சத்திரம் பிறந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்