நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் பீகார் போலீஸாருக்கு ஒத்துழைப்பு இல்லை… பீகார் துணைமுதல்வர்

நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் பீகார் போலீஸாருக்கு ஒத்துழைப்பு இல்லை… பீகார் துணைமுதல்வர்

கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் தொடர்பாக பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இது தொடர்பாக மும்பை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பீகாரில் உள்ள சுஷாந்த்தின் தந்தை, சுஷாந்தின் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மும்பைக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே மும்பையில் விசாரணை மேற்கொண்டு வரும் பீகார் போலீசாருக்கு, மும்பை காவல்துறையினர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் விசாரணைக்கு முட்டுக்கட்டையாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மும்பையில் உள்ள பீகார் போலீசரை மும்பை காவல்துறையினர் வழிமறித்து போலீஸ் வேன் ஒன்றில் ஏற்றுவது போல வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்