இளையராஜா குறிப்புகள் திருட்டு… நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார்

இளையராஜா குறிப்புகள் திருட்டு… நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார்

பிரசாத் ஸ்டுடியோவில் வைக்கப்பட்டிருந்த இசை குறிப்புகள் மற்றும் அவரது இசை கருவிகள் திருடப்பட்டுள்ளதாக இசையமைப்பாளார் இளையராஜா போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், சென்னை, சாலிகிராமத்தில், திரைப்படத் தயாரிப்பாளர் எல்.வி.பிரசாத்திற்கு சொந்தமான பிரசாத் ஸ்டூடியோ என்ற கட்டிடம் உள்ளது. அதில் ஒரு பகுதியை எல்.வி. பிரசாத் ரேகார்டிங் ஸ்டூடியோ அமைத்து கொள்ள ஒதுக்கி தந்தார். அதில் பல கோடி ரூபாய் செலவு செய்து பாடல் பதிவு கூடம் அமைத்தேன். ஏராளமான இசைக் கருவிகள், விலை மதிப்பற்ற இசை குறிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இந்த இடத்திலிருந்து தான், 1977 இல் இருந்து தமிழ் தெலுங்கு என பல்வேறு மொழி படங்களுக்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளேன்.

இந்நிலையில் கடந்த 2019 செப்டம்பரில் எல்.வி.பிரசாத் வாரிசான ரமேஷ் பிரசாத் என்பவரின் மகன் சாய் பிரசாத், அந்த இடத்தில் இருந்து என்னை வெளியேற்ற பல வழிகளில் தொல்லை கொடுத்தார். சட்ட விரோதமாக மின்சாரம் தண்ணீரை துண்டித்தார். 

தற்போது ஊரடங்கு காரணமாக என் ரேகார்டிங் தியேட்டர் புட்டப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் சாய் பிரசாத் தூண்டுதலில் மர்ம நபர்கள் எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள இசை கருவிகள் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி இருப்பதாக அறிகிறேன்.

அத்துடன் விலை மதிப்பற்ற என் இசைக்குறிப்புகள் திருடப்பட்டு, வேறு நபர்களுக்கு விற்கப்பட்டு இருப்பதும் தெரிய வருகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். சாய் பிரசாத் மற்றும் மர்ம நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்