சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தற்கொலை அல்ல, கொலை!

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தற்கொலை அல்ல, கொலை.. ஆதாரம் வெளியிட்ட சுப்பிரமணியன் சுவாமி
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை அல்ல, அது கொலை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சுஷாந்தின் மரணத்தை கொலை என்பதற்கான ஆதாரங்களை பட்டியலிட்டுள்ளார். அவர் இறந்து கிடந்த  இடத்தை பார்க்கும் போது, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அதாவது, கழுத்தில் இருந்த அடையாளத்துக்கும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் துணியின் அடையாளத்துக்கும் வித்தியாசம் உள்ளது. உடலில் பல்வேறு இடங்களில் அடையாளங்கள் இருக்கின்றன. சுஷாந்த் இறந்து கிடந்ததாக கூறப்பட்ட அறையின் மற்றொரு சாவி காணாமல் மாயமாகியுள்ளது என கூறியுள்ளார்.
அதே நேரத்தில், சுஷாந்தின் மேலாளர் திஷா சாலியனின் தற்கொலை சம்பவம் நிதி நெருக்கடி இல்லை. வீட்டுப் பணியாளரின் மாறுபட்ட தகவலால் இது தற்கொலை அல்ல, கொலை என்றே தெரிகிறது என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். மேலும், சுஷாந்த் சிங் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடந்த 15ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார். இந்த மரணத்தில் பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களுக்கு தொடர்பு உள்ளது என்றும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்