பாகுபலி இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா தொற்று…

பாகுபலி இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா தொற்று…

இயக்குநர் ராஜமவுலிக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டதை அடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.  இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் கொரானா வைரஸ் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. 

இதனால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர். பலரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள போராடி வருகின்றன.

இந்நிலையில் இந்த வைரஸ் தொற்று பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தில் அவருக்கு, அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய்,பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் குணமடைந்து வீடு திரும்பினார். 

இந்நிலையில் பாகுபலி படத்தினை பிரமாண்டமாக இயக்கிய பிரபல இயக்குநர் எஸ்.எஸ் ராஜமவுலிக்கும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி ராஜமவுலி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “எனக்கும் என் குடும்பத்தினருக்கும் சில நாட்களுக்கு முன்னர் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதனை அடுத்து நாங்கள் பரிசோதனை செய்துகொண்டு, அதில் லேசாக கொரோனா உள்ளது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்களின் அறிவுரைப்படி எங்களை வீட்டின் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். எந்த அறிகுறியும் இல்லாமல் நன்றாக உள்ளோம் . ஆனால் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ராஜமவுலி குடும்பத்தினர் விரைவில் குணமடைய பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.46%
 • இல்லை
  33.59%
 • யோசிக்கலாம்
  3.86%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்