நண்பர் கார்த்தியின் குரல் போற்றத்தக்கது - உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!

நண்பர் கார்த்தியின் குரல் போற்றத்தக்கது - உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!

நடிகர் காரத்திக் நேற்று சுற்றுச்சூழல் தாக்க வரைவு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், தற்போது மத்திய அரசு வெளியிட்டிருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் நம் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது என்றுதெரிவித்திருந்தார்.

மேலும் அந்த அறிக்கையில் இந்த சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்? கேள்வி எழுப்பி இருந்த அவர் இந்த வரைவு அறிக்கையில் சாதக பாதக அம்சங்களை பொது விவாதமாக்கி, அதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல நமக்குக் கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். 

இவரது இந்த அறிக்கைக்கு சூர்யா ஆதரவு தெரிவிக்கும் விதமாக பதிவிட்டிருந்தார். மேலும் இதுகுறித்து பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,"விவசாயிகளுக்கு எதிரான புதிய சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவை கண்டித்து திரையுலகிலிருந்து வெளிப்பட்டிருக்கும் நண்பர் கார்த்தி அவர்களின் குரல் போற்றத்தக்கது. உழவன் அமைப்பு மூலம் நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதோடு சமூக அக்கறைக்கான உங்கள் குரல் இதே துணிச்சலோடு தொடர்ந்து ஒலிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.46%
 • இல்லை
  33.59%
 • யோசிக்கலாம்
  3.86%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்