சுஷாந்த்தை தற்கொலை வழக்கு… நடிகை ரியா சக்ரபர்த்தி கைது செய்ய வாய்ப்பு…

சுஷாந்த்தை தற்கொலை வழக்கு… நடிகை ரியா சக்ரபர்த்தி கைது செய்ய வாய்ப்பு…

சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலி நடிகை ரியா சக்ரபர்த்தி மீது சுஷாந்தின் தந்தை புகாரில் அளித்துள்ளார்.

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் அவரது சொந்த ஊரான பீகார் மாநிலம் பாட்னாவில் சுஷாந்தின் தந்தை காதலி ரியா சக்ரபர்த்திக்கு எதிராக புகார் அளித்தார். அதில் ரியா சக்ரபர்த்தி சுஷாந்தை மிரட்டி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும், பண மோசடி செய்து தற்கொலைக்கு தூண்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள பாட்னா ராஜீவ் நகர் போலீஸார், ரியாவை கைது செய்வதற்காக மும்பை விரைந்துள்ளனர்.

இதையடுத்து முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்வது தொடர்பாக பிரபல வழக்கறிஞர் சதீஷ் மன்ஷிண்டேவுடன் ரியா ஆலோசனை நடத்தியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்