பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பிக்காக இதையெல்லாம் செய்யாமல் இருக்க வேண்டும்… ஓவியா ஓபன் டாக்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பிக்காக இதையெல்லாம் செய்யாமல் இருக்க வேண்டும்… ஓவியா ஓபன் டாக்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பிகாக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு போட்டியாளர்கள் துன்புறுத்தப்படுவதாக நடிகை ஓவியா கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழில் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஓவியா. அதன்பிறகு சில படங்களில் நடித்த ஓவியா கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் ஓவியா ஆர்மி என ஆரம்பித்தனர். இதனை தொடர்ந்து ஓவியா ஆன்லைனில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். 

இந்நிலையில் ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ”பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்பதே ஆதரிக்கிறீர்களா அல்லது எதிர்கிறீர்களா என என்ற கேள்வி எழுப்பி இருந்தார். 

அதற்கு ஒருவர் ஆம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று பதில் அளித்திருந்தார். இதற்கு ஓவியாவின் பதில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதில் அவர் ”டிஆர்பிக்காக போட்டியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வரை அவர்கள் சித்திர வதை செய்யாமல் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்”  என்று இவரது சமூக வலைத்தளங்களில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ”எப்படி தெரிந்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏன் ஒப்புகொண்டீர்கள்?” என்று ஒரு ரசிகர் கேள்விக்கு பதில் அளித்த ஓவியா, ”ஒரு ஒப்பந்தத் தாள் ஒருவரை மன அதிர்ச்சியில் ஆழ்த்துவதற்கான அல்லது தற்கொலை செய்து கொள்வதற்கான உரிமமாக இருக்கக்கூடாது. நிகழ்ச்சியை தடை செய்ய நான் சொல்லவில்லை. கொஞ்சம் கருணை காட்டுங்க! நாங்கள் அனைவரும் மனிதர்கள் தான்” என்று பதிவிட்டுள்ளார். 

பிக் பாஸ் முதல் சீசன் முடிந்து 2 வருடங்களுக்கு பிறகு ஓவியாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்