வீட்டில் சூதாட்டம்… நடிகர் ஷியாம் அதிரடி கைது…

வீட்டில் சூதாட்டம்… நடிகர் ஷியாம் அதிரடி கைது…

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக திரைப்பட நடிகர் ஷியாம் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழில் 12 பி படத்தின் மூலம் கதாநாகனாக அறிமுகமானார் ஷியாம். அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இயற்கை படம் நல்ல பெயரை பெற்று தந்தது.

இந்நிலையில் நடிகர் ஷியாம் நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இங்கு இரவு நேரத்தில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அடிக்கடி வந்து குதுகலத்தில் ஈடுபடுவதாக அக்கம்பக்கத்தில் பக்கத்தில் உள்ளவர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறை உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று இரவு அதிரடியாக ஷியாம் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் வீட்டுக்குள்ளேயே சூதாட்ட கிளப் செயல்பட்டது தெரியவந்தது. வீட்டிலிருந்து சீட்டுக் கட்டுகள் பணம் போன்றவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் நடிகர் ஷியாம், அவரின் வழக்கறிஞர்கள், இன்சூரன்ஸ் அதிகாரி, திரைப்பட இயக்குனர்கள், தொழிலதிபர்கள், உணவு உரிமையாளர்கள், என்று 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வீட்டின் உரிமையாளரான ஷியாம் தான் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலுக்கு தலைமை என்று தெரிய வந்துள்ளது.

சூதாட்டத்தில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அழைத்துச் செல்லப்பட்ட 13 பேரும் நள்ளிரவு நேரத்தில் ஜாமீன் பெற்று வீடு திரும்பி விட்டனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.46%
 • இல்லை
  33.59%
 • யோசிக்கலாம்
  3.86%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்