சீமானை விடாதீர்கள் என வீடியோ வெளியிட்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி…

சீமானை விடாதீர்கள் என வீடியோ வெளியிட்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி…

சீமான், ஹரி நாடாரை கைது செய்ய வேண்டும் என வீடியோவை வெளியிட்டுவிட்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி செய்துள்ளார். 

விஜய்யின் ஃப்ரெண்ட்ஸ்,பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விஜய லட்சுமி. இவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக தொடர்ந்து புகார் கூறியுள்ளார். மேலும் சீமான் தன்னுடைய இருந்ததாக கூறி சில அந்தரங்க வீடியோகளையும் அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் நடிகை விஜய லட்சுமி திருவான்மியூரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அவர் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் நிர்வாகம் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில் தற்கொலை முயற்சிக்கு முன்னதாக விஜய லட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில்,” இது எனது கடைசி வீடியோ, கடந்த 4 மாதமாக சீமானும், சீமான் கட்சியினரும் கொடுத்த அழுத்தம் காரணமாக மன அழுத்தத்தில் உள்ளேன். ரொம்ப மல்லுக்கட்டிட்டு வாழணும்னு முயற்சித்தது எனது அம்மா, அக்காவுக்காகத்தான். நேற்று முந்தினம் ஹரிநாடார் பேசி ரொம்ப அசிங்கப்படுத்தியது, மீடியாவில் என்னை அசிங்கப் படுத்தியது போதும் என ஆகிவிட்டது. இதுக்குமேல் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. எனது குடும்பத்தை விட்டுச் செல்கிறேன். சீமானை விடாதீர்கள். அவர் முன் ஜாமீன் எடுக்கவோ, தப்பிக்கவோ விடக்கூடாது. நான் அதிக நாள் வாழ நினைத்தேன். ஆனால் வாழ விடவில்லை. சீமான், ஹரி நாடாரை கைது செய்ய வேண்டும்” என கண்ணீர் வடித்தப்படி அதில் கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்