நேரம் மீண்டும் வராது… அமைதியாக கடந்து செல்வோம்… ஏ ஆர் ரஹ்மான் ட்வீட்…

நேரம் மீண்டும் வராது… அமைதியாக கடந்து செல்வோம்… ஏ ஆர் ரஹ்மான் ட்வீட்…

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் சமீபத்தில் ஒரு வானொலி நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ஹிந்தி படங்களில் தான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுவதாக கூறி இருந்தார்.

சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளியாகியுள்ள தில் பேச்சாரோ படத்தின் இயக்குநர் தன்னை சந்தித்த போது, பலரும் ஏ.ஆர். ரஹ்மானிடம் செல்ல வேண்டாம் என கூறியதாகவும், சிலர் அவரைத் தடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படித்தான் தனக்கு வரும் நல்ல படங்களை பறிக்க ஒரு கும்பல் காத்திருப்பதாகவும் ரஹ்மான் கூறியுள்ளார்.ஏ.ஆர். ரஹ்மானின் இந்த குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த ரஹ்மானின் குற்றசாட்டுகளுக்கு பதிவிட்ட பாலிவுட் இயக்குனர் ஷேகர் கபூர், “ உங்கள் பிரச்சனை என்ன தெரியுமா ரஹ்மான் ? நீங்கள் ஆஸ்காருக்கு பின் பாலிவுட் பக்கம் வராமல் முடித்துக் கொண்டீர்கள். இதிலிருந்து நீங்கள் பாலிவுட்டை காட்டிலிலும் திறம்பட செயல்படும் திறமை கொண்டவர்கள் என்பது நிரூபணமாகிறது எனக் கூறியிருந்தார்.

 

அதற்கு பதிலளித்த ஏ.ஆர் ரஹ்மான், "இழந்த பணம், புகழை மீண்டும் பெற்றுவிடலாம், ஆனால் இழந்த நேரம் மீண்டும் கிடைக்காது; மிகப்பெரிய காரியங்கள் இருப்பதால் அமைதியாக கடந்து செல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்