கொரோனா வைரஸ் காரணமாக பிரபலம் தெலுங்கு நடிகரின் நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்றது.
கொரோனா வைரஸ் காரணமாக பிரபலம் தெலுங்கு நடிகரின் நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்றது.
கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் திருமணங்கள் போன்ற சுபநிகழ்ச்சிகள் மிகவும் எளிமையாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரபலங்களின் நிகழ்ச்சிகளும் மிக எளிமையாக நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பிரபல தெலுங்கு ஹீரோ நிதினின் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் நிதின் தெலுங்கு ஜெயம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்