தனது பிறந்தநாளில் நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தனது பிறந்தநாளில் நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சூர்யா நடிகர் சிவக்குமார் மகனாக இருந்தாலும் தனது கடின உழைப்பால் திரையுலகில் போராடி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமான சூர்யா அடுத்தடுத்த படங்களில் தன்னை தனே செதுக்கி கொண்டு தற்போது சிறந்த நடிகராக உயர்ந்துள்ளார் இவர் நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், அயன் என பல்வேறு படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் ஹிட் படங்களாக அமைந்தன.
இந்நிலையில் இன்று தனது 45வது பிறந்தநாளைக் கொண்டாடும் சூர்யாவுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ட்விட்டர் இணைய பக்கத்தில் #HappyBirthdaySuriya என்கிற ஹேஷ் டேக் ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டி சூரரைப்போற்று படக்குழு காட்டுப் பயலை என்கின்ற பாடல் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டு சூர்யா ” பாசிட்டிவிட்டி மற்றும் அன்பை பரப்புவோம்!! பாதுகாப்பாக இருங்கல். லவ்யூஆல் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு மூலம் சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.