ஸ்ரீதிவ்யா சோகமான பதிவு… ரசிகர்கள் அப்செட்…

ஸ்ரீதிவ்யா சோகமான பதிவு… ரசிகர்கள் அப்செட்...

நடிகை ஸ்ரீதிவ்யா தனது இணைய பக்கத்தில் சோகமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கில் ‘ஹனுமான் ஜங்ஷன்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. இதனைத்தொடர்ந்து சில தெலுங்கு படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு மனசார என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அந்த படம் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நாயகியாக நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

ஆனால் கடந்த சில வருடங்களாக நடித்த தமிழ் படங்கள் படுதோல்வி அடைந்தன. இதனால் இவருக்கு இந்த வருடம் பட வாய்ப்பு குறைய தொடங்கியது கடைசியாக இவர் ’சங்கிலி புங்கிலி கதவ தொர’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் தனது இணைய தள பக்கத்தில் சோகமான போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில்,’ வாழ்க்கையில் பிழைக்க போராட்டங்கள் தேவை, ஏனென்றால் எழுந்து நிற்க, கீழே விழுவது என்னவென்று உங்களுக்குத் தெரியும்!’ என்று தெரிவித்துள்ளார்.

படவாய்ப்புகள் குறைந்துள்ளதால் இப்படி ஸ்ரீதிவ்யா சோகமாக இருக்கிறார் என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்