உலக சாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் கடைசி பட ட்ரைலர்….

உலக சாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் கடைசி பட ட்ரைலர்….

வெளியான 24 மணிநேரத்தில் சுஷாந்த் சிங் கடைசியாக நடித்த 'தில் பெச்சாரா' படத்தின் ட்ரைலர் உலக சாதனை படைத்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இந்த முடிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் அவர் கடைசியாக நடித்த 'தில் பெச்சாரா' படம் வருகிற ஜூலை 24-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சுஷாந்த் சிங்குடன் சைப் அலி கான், சஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதற்கிடையில் நேற்று இப்படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் யூடியூபில் வெளியிட்டார்கள். இந்த டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே அதிக லைக்குகளைப் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளது. 

இதற்கு முன்பு யூடியூபில் வெளியான சினிமா ட்ரைலர்களில் ஹாலிவுட் படங்களான அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் ட்ரைலர் மொத்தமாக 36 லட்சம் லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது.

அந்த சாதனையை 'தில் பெச்சாரா' படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்திற்குள்ளாகவே முறியடித்துள்ளது. தற்போது வரை 'தில் பெச்சாரா' ட்ரைலர் 50 லட்சம் லைக்குகளுடன் 2.5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்