அதுக்கெல்லாம் நோ சொன்ன நடிகை ஷில்பா ஷெட்டி… ஷாக்கில் ரசிகர்கள்...

அதுக்கெல்லாம் நோ சொன்ன நடிகை ஷில்பா ஷெட்டி… ஷாக்கில் ரசிகர்கள்...

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சைவத்திற்கு மாறிவிட்டதாக தனது இணையப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகை, நடிகர்கள் தனது வீடுகளில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தங்கள் ரசிகர்களுடம் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்று நடிகை,நடிகர்கள் தங்கள் இணையப்பக்கங்களில் படு ஆக்டிவாக உள்ளனர். அந்த வகையில் பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் நேற்றைய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

அந்த பதிவில் அவர், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதில் என்றும் உறுதியுடன் இருப்பவள் நான். அதன்படி, சுற்றுச்சூழலில் என்னால் ஏற்படக் கூடிய கார்பனின் அளவை குறைக்க முடிவு செய்தேன். எனக்கு, இறைச்சி இல்லாமல் ஒருவேளை உணவு உண்பது கூட மிகவும் கடினமான செயல். ஆனால், மன உறுதியுடன் படிப்படியாக முயற்சி செய்து எனது 45-வது வயதில் தற்போது சைவ உணவுக்கு முற்றிலுமாக மாறிவிட்டேன். இவ்வாறு ஷில்பாஷெட்டி கூறியுள்ளார்.

இதனை பார்த்த  ரசிகர்கள் ஷில்பாவா சைவத்திற்கு மாறியது என்று ஷாக்கில் உள்ளனர். மற்றும் பலர் சைவத்திற்கு மாறியதற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்