வாரிசு நடிகர்கள் எனது பட வாய்ப்புகளை தடுத்தனர்… டாப்ஸி ஓபன் டாக்…

வாரிசு நடிகர்கள் எனது பட வாய்ப்புகளை தடுத்தனர்… டாப்ஸி ஓபன் டாக்…

தன்னுடைய பட வாய்ப்புகளை பாலிவுட் வாரிசு நடிகர்கள் தடுத்ததாக பிரபல நடிகை டாப்சி தெரிவித்துள்ளார்.

தமிழில் தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. அப்படத்தின் தொடர்ந்து இவர் வந்தான் வென்றான், காஞ்சனா-3, வைராஜா வை, கேம் ஓவர் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு ஹிந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். 

இதற்கிடையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதற்கு வாரிசு நடிகர்கள் புதிய படங்களில் தன்னை ஒப்பந்தம் செய்ய விடாமல் தடுத்தது தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. 

இந்நிலையில் இதுகுறித்து டாப்ஸி தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,  “ சினிமாவில் பிரபலமாக இருப்பவர்களின் குடும்பத்தில் இருந்து வருபவர்களுக்கு தொடர்புகள் அதிகம் கிடைக்கிறது. இதனால் சினிமா வாய்ப்புகளை எளிதாக பெற்று விடுகின்றனர். ஆனால் வெளியில் இருந்து வரும் நடிகர் நடிகைகள் பிரபலங்களுடன் அறிமுகமாகவும் தொடர்புகளை உருவாக்கவும் அதிக நாட்கள் தேவைப்படும். 

இயக்குநர்கள் வெளியில் இருந்து வருபவர்களை நடிக்க வைப்பதற்கு பதிலாக தனக்கு தெரிந்தவர்களையே நடிக்க வைக்கின்றனர். நான் வாரிசுகள் ஆதிக்கத்தினால் சில பட வாய்ப்புகளை இழந்து வேதனைப்பட்டேன். இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படுவதற்கு ரசிகர்களும் காரணம். சினிமா குடும்பத்தில் இருந்து அறிமுகமாகிறவர்களின் படங்களை பார்க்கவே அவர்கள் ஆர்வமாக செல்கிறார்கள். மற்றவர்கள் படங்களை பார்க்க மறுக்கின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்