’ஒரு குழந்தைய கற்பழிச்சு கொல்றதவிட பெரிய தப்பு வேறு என்ன இருக்க முடியும்’ - கவின் ஆவேசம்

’ஒரு குழந்தைய கற்பழிச்சு கொல்றதவிட பெரிய தப்பு வேறு என்ன இருக்க முடியும்’ - கவின் ஆவேசம்

அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட செயலை கண்டித்து நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கவின் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஏழு வயதுச் சிறுமியை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு காரணமானவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை கொடுக்க வேண்டும் என பலரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கவின் தனது சமூக வலைத்தளத்தில் இந்த கொடூர செயலை கண்டித்து ஒரு பதிவு செய்துள்ளார்; அந்த பதிவில், “இன்னும் எத்தனை ஹேஷ்டேக் போடணும், இன்னும் எத்தனை நியாயம் கேட்கணும். இன்னும் எவ்வளவு போராடனும். அந்த குழந்தை மாஸ்க் போட்டு சிரிச்சுக்கிட்டு இருக்குற ஒரு போட்டோ, இன்னொரு போட்டோவை பார்க்க கூட முடியல. நல்லா நல்லா இருப்பிங்ககளா டா நீங்க எல்லாம். ஒரு குழந்தையை கற்பழித்து கொல்றதை விட பெரிய தப்பு என்ன இருக்க முடியும். பொண்ண பெத்தவன் எல்லாம் பயப்படுற மாதிரி இந்த தப்பெல்லாம் செய்றவனும் பயப்படனும் தானே. அதுக்காகவாச்சும் ஒரு சட்டம் பொறக்க கூடாதா? என்று கவின் பதிவு செய்துள்ளார்.

கவினின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்