டிக்டாக் தடை பற்றி மாஸ்டர் ஹீரோயின் சர்ச்சை பேச்சு…

டிக்டாக் தடை பற்றி மாஸ்டர் ஹீரோயின் சர்ச்சை பேச்சு…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

மாஸ்டர் திரைக்கு வரும் முன்பே அவருக்கு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன குவிந்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட 59 சீன மொபைல் ஆப்களை தடை செய்தது. இதனால் டிக்டாக் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். 

இந்நிலையில் இது குறித்து மாளவிகா மோகனன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில்“ டிக்டாக்கில் மூழ்கியிருந்தவர்கள் இனி அதைவிடக் கொஞ்சம் குறைந்த அளவு மோசமான ஆப்-ஐத் தேடிச் செல்வார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

மாளவிகாவின் இந்தப் பதிவைப் பார்த்து டிக்டாக் பயனர்கள் கோபமாகியுள்ளனர். இதனை தொடர்ந்து மாளவிகா மோகனன் நடிப்பை விமர்சித்தும், அவரது ஹாட் போட்டோஷூட்கள் பற்றியும் டிக்டாக் பிரியர்கள் கமெண்ட்களை வெளியிட்டு வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.3%
 • இல்லை
  33.72%
 • யோசிக்கலாம்
  3.88%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.1%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்