ஒரு மாதத்தில் 50 முறை செல்போன் எண்ணை மாற்றிய சுஷாந்த் ஏன்?: சேகர் சுமன்

ஒரு மாதத்தில் 50 முறை செல்போன் எண்ணை மாற்றிய சுஷாந்த் ஏன்?: சேகர் சுமன்

கடந்த மாதம் 14ம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த மாதம் 14ம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்  தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்நிலையில் சுஷாந்தின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். சுஷாந்த் வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகர் சேகர் சுமனும் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவுக்கு சென்ற சேகர் சுமன் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவை சந்தித்து சுஷாந்த் சிங் ராஜ்புட் விஷயம் பற்றி பேசியுள்ளார். சுஷாந்த் பற்றி சேகர் சுமன் கூறியதாவது,

சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் தற்கொலை போன்று தெரிந்தாலும், கடந்த சில நாட்களாக வெளியான தகவல்களும், ஆதாரங்களும் இதில் வில்லங்கம் இருப்பதையே தெரிகிறது.

சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டதற்கு பின்னால் சதி இருக்கிறது. இது குறித்து உடனே விசாரணை நடத்த வேண்டும். ஹிந்தி திரையுலகில் சின்டிகேட் மற்றும் மாஃபியா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவை தான் ஒரு நடிகரின் எதிர்காலத்தை முடிவு செய்கிறது. 

அந்த சின்டிகேட்டில் எந்தெந்த பாலிவுட் பிரபலங்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் அவர்களின் பெயர்களை வெளியிட முடியாது.

திரையுலகில் நிறைய கேங்குகள் இருக்கிறது. சுஷாந்த் சிங் ராஜ்புட் போன்ற ஒருவர் எப்படி தற்கொலை செய்து கொள்ளும் முன்பு எதுவுமே எழுதி வைக்கவில்லை? கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுஷாந்த் தன் செல்போன் எண்ணை 50 முறை மாற்றியிருக்கிறார். யாரை தவிர்க்க அவர் அப்படி செய்தார்? தொழில் தொடர்பான எதிர்ப்பா?

பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் குடும்பத்தாரை சந்தித்து பேசியிருக்க வேண்டும். நான் அவரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் கொரோனா பிரச்சனையால் நிதிஷ் குமார் யாரையும் சந்திப்பது இல்லை என்றார்கள். தேஜஸ்வி என்னை சந்திக்கும்போது நிதிஷ் குமாரால் ஏன் முடியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் பீகார் முதல்வர் மகாராஷ்டிரா மாநில முதல்வரை தொடர்பு கொண்டு சுஷாந்தின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிக்கை விடுக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 6 மாதங்களில் மட்டும் 7 பட வாய்ப்புகளை இழந்திருக்கிறார். மேலும் சுஷாந்த் எந்த கேங்கிலும் இல்லை, யார் வாரிசும் இல்லை. அவருக்கு பாலிவுட்டில் காட்ஃபாதரும் இல்லை. தன் திறமையை மட்டும் நம்பிய சுஷாந்த் தானாக தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com