பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இவருக்கும் பீட்ட பால் என்பவருக்கும் மூன்றாவது திருமணம் நடைபெற்றது.
பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இவருக்கும் பீட்ட பால் என்பவருக்கும் மூன்றாவது திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவர் முத்தம் கொடுத்துக் கொண்ட போட்டோ வெளியாகி வைரலானது.
அந்தரங்கமான விஷயங்களை இப்படியா வெளியிடுவது என வனிதா மீது பலரும் விமர்சனம் தெரிவித்தனர்.இதற்கிடையில் பீட்டர் பாலின் முதல் மனைவி போலீஸில் புகார் அளித்தார். இதனாலும் பெரும் பரபரப்பு எழுந்தது. இதற்கான விளக்கத்தை வனிதா அவரது யு டுயுப் சேனலில் தெரிவித்தார்.
இந்நிலையில் முத்த சர்ச்சைக்கு இன்று ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அவரது கணவர் பீட்டர் பால் நெற்றியில் முத்தமிடும் போட்டோவை பகிர்ந்து, ”மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று” என்று தங்க மீன்கள் பட வரிகளை பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவிற்கு பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.