கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் ஜீவாவின் முதல் ஹிந்தி படம்….

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் ஜீவாவின் முதல் ஹிந்தி படம்….

நடிகர் ஜீவா நடித்துள்ள ஹிந்தி படம் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

1983ம் ஆண்டு முதன்முறையாக இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்த அப்போதய கேப்டன் கபில்தேவ் வாழ்க்கைவரலாற்று நிகழ்வுகள் மற்றும் இந்திய கிரிக்கெட்டை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் படம் தயாராகி உள்ளது. 

கபீர்கான் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடித்துள்ளார். உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்துள்ளார். இதன்மூலம் பாலிவுட்டில் ஜீவாவின் முதல் படம் இது. 

இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில் இப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. 

இந்நிலையில், இப்படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்