பாலிவுட் நடிகர் ஆமிர் கான் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…

பாலிவுட் நடிகர் ஆமிர் கான் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…

தனது வீட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பதன்தொடர்பாக பாலிவுட்நடிகர் அமிர் கான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நடிகர்கள் நடிகைகள் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர்கான் வீட்டிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று பரிசோதனை செய்ததாகவும் அதில் ஆமீர்கானுக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின.

இந்நிலையில் இதுகுறித்து ஆமீர்கான் தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ’என்னுடைய அலுவலக ஊழியர்கள் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்றும், ஒரு சிலரை தவிர மற்ற அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று ரிசல்ட் வந்துள்ளதாகவும் ஆமீர்கான் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அதில், தனது தாயாருக்கு மட்டும் இன்னும் பரிசோதனை முடிவு வரவில்லை என்றும் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வர வேண்டும் என்று தான் இறைவனை வேண்டிக் கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் எங்களுக்கு விரைவாகவும் அக்கறையுடனும் உதவிய மும்பை மாநகராட்சிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூற விரும்புகிறேன். ’ என்று ஆமீர்கான் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்