நான் காய்கறி விற்றேனா.? வைரல் வீடியோவுக்கு விளக்கம் அளித்த பாலிவுட் நடிகர்…

நான் காய்கறி விற்றேனா.? வைரல் வீடியோவுக்கு விளக்கம் அளித்த பாலிவுட் நடிகர்…

பிரபல நடிகர் ஒருவர் தெருவில் பாட்டு பாடி காய்கறிவிற்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலானது. ஆனால் தான் காய்கறி விற்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு வைரஸ் எந்தவித பாகுபாடில்லாமல் அனைத்து தரப்பினரின் இயல்பு வாழ்க்கையைும் பாதித்துள்ளது. அதுவும் குறிப்பாக திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறாததால் அது சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.சில நடிகர்கள் வருமானம் இன்றி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஜாவேத் ஹைதர் தெருவில் காய்கறி விற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜாவேத் ஹைதர் தெருவில் பாடிப்பாடி காய்கறி விற்று வருகிறார். இவர் ஆமிர் கானின் 'குலாம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் காய்கறி விற்பனை செய்வது போன்ற வீடியோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர் கூறுகையில், தான் அந்த வீடியோவை டிக்டாக்கில் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்த எடுத்ததாகவும் கடவுள் ஆசீர்வாதத்தில் தனக்கு காய்கறி விற்கும் நிலை ஏற்படவில்லை என்றும் , வரும்காலத்தில் அந்த நிலை வந்தாலும் தான் கவலைப்பட போவதில்லை தற்போது என்னிடம் தேவையானவை உள்ளது என்று தெரிவித்தார். 

மேலும் சாதாரணமாக எடுக்கப்பட்ட வீடியோ இவ்வாறு வைரலாகும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்