ஓடிடி-யில் வெளியாகும் யோகிபாபு படம்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஓடிடி-யில் வெளியாகும் யோகிபாபு படம்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு

யோகிபாபு நாயகனாக நடித்துள்ள படம் `காக்டெய்ல்'. இப்படத்தினை அறிமுக இயக்குனர் முருகன் இயக்கியுள்ளார். இதில் யோகிபாபுவுடன், சாயாஜி ஷிண்டே நகைச்சுவை கலந்த இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மனோபாலா, மைம்கோபி, சாமிநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் காக்டெயில்' என்ற பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

இப்படத்தினை லிசா, டேனி ஆகிய படங்களின் தயாரிப்பாளரும் விஜய்காந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த `மதுரை வீரன்' படத்தின் இயக்குனருமான பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரித்துள்ளார். இப்படம் கடந்த மார்ச் 20-ந் தேதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. 

இந்நிலையில், இப்படத்தை திரையரங்குக்கு பதிலாக நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை 10-ந் தேதி ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
    59.46%
  • இல்லை
    33.59%
  • யோசிக்கலாம்
    3.86%
  • கருத்து கூற விரும்பவில்லை
    3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்