நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரபல பாலிவுட் நடிகர்களின் திரைப்படங்கள்!

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரபல பாலிவுட் நடிகர்களின் திரைப்படங்கள்!

கொரோனா ஊரடங்கால் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் சிலரின் திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உலகம் பெரும் அச்சுறுத்தில் உள்ளது. இதன் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல துறைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள், மால்களும், கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் வெளியான திரைப்படங்கள், வெளியீட்டிற்காக காத்திருந்த திரைப்படங்கள் என அனைத்தும் நிறுத்தப்பட்டன. 

இதனால் இந்தியாவில் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதிப்பை குறைக்க தற்போது பல்வேறு திரைப்படங்கள் OTT தளங்களில் ( Over The Top) வெளியாகி வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக பாலிவுட்டின் பிரபல ஹீரோக்களின் படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஓடிடியில் திரைப்படங்கள் நேராடியாக வெளியானால் திரையரங்குகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் எனக்கூறி தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் ஓடிடியில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் 7 பாலிவுட் திரைப்படங்களின் விவரம்: 

• ‘லஷ்மி பாம்’ -அக்‌ஷய் குமார் (காஞ்சனா படத்தின் ரீமேக்)

• அஜய் தேவ்கன் மற்றும் சஞ்சய் தத் நடித்துள்ள பூஜி: தி ப்ரைட் ஆப் இந்தியா ('Bhuju: The Pride of India') திரைப்படம். 

• சஞ்சய் தத் மற்றும் ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள  ‘சடக் 2’

• அபிஷேக் பச்சன் நடித்துள்ள  ‘பிக் புல்’ 

• சுஷாந்த் சிங்கின் கடைசி திரைப்படமான ‘தில் பெச்சாரே’

• விதுத் ஜமால் நடிப்பில் உருவாகியுள்ள ‘குடா ஹஃபிஸ்’

• குனால் கீமூ மற்றும் ராஷுகா துகல் நடித்துள்ள  ‘லூட் கேஸ்’ 

பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களின் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்