கொடூர குற்றத்தின் பின்னால் இருப்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்: சிவகார்த்திகேயன்

கொடூர குற்றத்தின் பின்னால் இருப்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்: சிவகார்த்திகேயன்

இந்த கொடூர குற்றத்தின் பின்னால் இருப்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் கைது செய்து இவர்கள் மர்மான முறையில் உயிரிழந்தனர். இது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. மேலும் தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் மறைவு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "இந்த கொடூர குற்றத்தின் பின்னால் இருப்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அந்த தண்டனைகள் இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். இதன் மூலம் நம் அனைவருக்கும் அரசாங்கம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

 • சரியான முடிவு
  59.56%
 • தவறான முடிவு
  20.48%
 • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  11.95%
 • படத்தின் லாபத்திற்கு உதவும்
  8.02%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்