இரட்டை வேடம் போடு சமந்தா…

இரட்டை வேடம் போடு சமந்தா…
இரட்டை வேடம் போடு சமந்தா…

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்பவர் சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யூ டர்ன் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்பவர் சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யூ டர்ன் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அப்படத்தினை தொடர்ந்து சமந்தா தமிழில் சூப்பர் டீலக்ஸ், தெலுங்கில் மஜிலி மற்றும் ஒ பேபி எந்தசக்ககுன்னவே என இவர் படங்கள் அடுத்தடுத்து ரிலிஸுக்கு தயாராகி வருகின்றன. 

இந்நிலையில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள மஜிலி படத்தில் தனது கணவர் நாகசைதன்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். வரும் ஏப்ரல் 5ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் இவருக்கு இரண்டு விதமான கெட்-அப்பாம். இதில் இயல்பான இப்போதைய தோற்றமும், பிளாஷ்பேக் காட்சியில் மாணவியாக மற்றொரு தோற்றத்திலும் நடித்துள்ளாராம். மேலும்  ஒ பேபி எந்தசக்ககுன்னவே படத்தில் இளமையான தோற்றத்திலும், வயதான தோற்றத்திலும் நடிக்கிறார்.

இதன் மூலம் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியாகவுள்ள இரண்டு படங்களிலும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதனால் இரண்டு விதமான சமந்தாவை காண  ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com