சுஷாந்தின் மறைவை ஏற்க முடியாத அவரது செல்ல நாய்

சுஷாந்தின் மறைவை ஏற்க முடியாத அவரது செல்ல நாய்

சுஷாந்தின் மறைவை ஏற்க முடியாத அவரது செல்ல நாய் - கலங்கடிக்கும் வீடியோ!

கடந்த ஞாயிற்றுகிழமை பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலைக்கு மன அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் பரவின. 
மேலும் அவரது உறவினர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் சிபிஐ இதனை விசாரணை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 
சுஷாந்த் இறப்பால் மீள துயரத்தில் அவரது ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சுஷாந்த் ஆசை ஆசையாக வளர்ந்த நாய் அவர் இல்லாமையால் மிகவும் சோர்ந்து வாடியுள்ளது. முதலாளியின் வருகைக்காக வீடு முழுக்க தேடிக்கொண்டிருக்க்கும் அந்த நாய் செல்போனில் சுஷாந்தின் முகத்தை பார்த்ததும் போனை கட்டிப்பிடித்துக்கொண்டு தடவுகிறது. இந்த வீடியோ அனைவரையும் கண்ணீரில் கலங்கடித்துவிட்டது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com