கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதம் காலமாக தியேட்டர்கள் அனைத்தும் மூட பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சூர்யாவின் தயாரிப்பில் 'பொன்மகள் வந்தாள்' ஓடிடி தளத்தில் வெளியானது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்களின் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் தியேட்டர் உரிமையாளர்களின் எதிர்ப்பை மீறி போன மாதம் "பொன்மகள் வந்தாள்" திரைப்படம் வெளியானது. அதேபோல் இன்று பென்குயின் படமும் ஓடிடி தளத்தில் வெளியானது.