சென்னையில் சிறப்பாக நடந்த ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு.....

சென்னையில் சிறப்பாக நடந்த ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு.....
சென்னையில் சிறப்பாக நடந்த ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு.....

சென்னையில் இன்று புதுமண தம்பதிகளான நடிகர் ஆர்யா-சாயிஷாவின் திருமண வரவேற்பு சிறப்பாக நடந்தது.

அறிந்தும் அறியாமலும் படத்தின் வாயிலாக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனவர் நடிகர் ஆர்யா. பட்டியல், நான் கடவுள், மதராசப்பட்டிணம், ராஜா ராணி போன்ற படங்களின் வாயிலாக இளம் ரசிகைகளின் மனதில் இடம் பிடித்தார். மிகவும் கலகலப்பான நடிகரான ஆர்யா சா்ச்சையிலும் சிக்கினார்.

பூஜா, அனுஷ்கா என்று அவருடன் ஜோடி சேரும் அனைத்து நடிகைகளுடன் அவர் காதலிப்பதாக வதந்திகள் வந்து கொண்டே இருந்தது. ஆனால் அவரை ஆர்யா கண்டு கொள்வதில்லை. இந்நிலையில் கஜினிகாந்த் படத்தில்  நடித்த நடிகை சாயிஷா சைகலுக்கும் ஆர்யாவுக்கும் காதல் தீ பத்தி கொண்டது. இதனை இருவரும் கடந்த காதலர் தினத்தன்று அறிவித்தனர்.

ஆர்யா-சாயிஷா காதலுக்கு அவர்களது வீட்டார்கள் சம்மதம் தொிவித்தனர். இதனையடுத்து ஹைதராபாத்தில் கடந்த 10ம் தேதி அவர்களது திருமணம்  சிறப்பாக நடைபெற்றது. இதில் சுனில் கவாஸ்கர், அல்லு அர்ஜூன் என பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

மார்ச் 14ம் தேதி (இன்று) சென்னையில் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு நடக்கும் என்று ஆர்யா குடும்பத்தினர் கூறியிருந்தனர். அதன்படி இன்று ஆர்யா-சாயிஷா தம்பதிகளின் திருமண வரவேற்பு சிறப்பாக நடந்தது. இதில் திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com