மூளையில்லாத சைக்கோக்களிலன் கமெண்டுகளையும் கண்டுகொளாதே என்று பதிவிட்டு, ஜூலிக்கு காயத்ரி அட்வைஸ் செய்துள்ளார்.
பிக் பாஸ் புகழ் ஜூலி குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. அண்மையில் அவர் போலீஸ் ஜீப் மீது தனது காரை மோதச் செய்தார் என்றும், இதனைக் கண்டித்த போலீசார, ஜூலியின் காதலர் தாக்கினார் என்றும் செய்தி வெளியானது. இதனை ஜூலி மறுத்து வீடியோ வெளியிட்டார். ஆனால், அவரது பதிவுக்கு பதிலடியாக சிலர் ஆபாசமாக கமெண்ட் போட்டனர்.
இந் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்ட காய்த்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜூலி, இதுகுறித்து உடனே காவல்துறையில் புகார் கொடு. அதற்கு நான் உதவி செய்கிறேன். கடவுளை நம்பு. அவர் உன்னுடன் இருக்கிறார். இதுபோல லூசுகளிடம் பேசி உன் நேரத்தை வீணாக்தாதே! உன்னுடைய வளர்ச்சியை பார்த்து பொறாமைப் படுவர்களையும், மூளையில்லாத சைக்கோக்களிலன் கமெண்டுகளையும் கண்டுகொளாதே என்று பதிவிட்டு, அவருக்கு அட்வைஸ் செய்துள்ளார்.