பிாியங்கா சோப்ராவுக்கு கிப்டா கிடைத்த 3 கோடி ரூபாய் மெர்சிடிஸ் சொகுசு கார்!

பிாியங்கா சோப்ராவுக்கு கிப்டா கிடைத்த 3 கோடி ரூபாய் மெர்சிடிஸ் சொகுசு கார்!
பிாியங்கா சோப்ராவுக்கு கிப்டா கிடைத்த 3 கோடி ரூபாய்  மெர்சிடிஸ் சொகுசு கார்!

பாலிவுட் நடிகை பிாியங்கா சோப்ராவுக்கு அவரது காதல் கணவர் நிக் ஜோனஸ் ரூ.3 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் சொகுசு காரை பாிசாக வழங்கி அசத்தி உள்ளார்.

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிாியங்கா சோப்ரா அமொிக்கரான நிக் ஜோனஸை நீண்ட காலமாக காதலித்து வந்தார். நிக் ஜோனஸ் பிாியங்கா சோப்ராவை விட வயது குறைந்தவர் என்ற போதிலும் காதலுக்கு கண் இல்லை என்பது போல் அவர்களது காதலுக்கு வயதும் ஒரு தடையாக இல்லை.

பிாியங்கா சோப்ரா தனது காதலர் நிக்ஜோனஸை கடந்த டிசம்பாில் கரம் பிடித்தார். அவர்களது திருமணம் இந்தியாவில் கிறிஸ்துவ மற்றும் இந்து முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. பிாியங்கா சோப்ராவின் திருமணம் மற்றும் வரவேற்பில் நாட்டின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

புதுமண தம்பதிகளான பிாியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் தம்பதியினர் சந்தோஷமாக தனது இல்லற வாழ்க்கையை இனிதே நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிாியங்கா சோப்ரா ரூ. 3 கோடி விலையிலான மெர்சிடிஸ் மேபேட்ச் எஸ்650 காருக்கு சொந்தக்காரியாக உள்ளார்.  அந்த காரை அவரது காதல் கணவர்  நிக் ஜோனஸ் அன்பளிப்பாக அளித்து பிாியங்கா சோப்ராவை  அசத்தி விட்டார். பிாியங்கா சோப்ராகு வானில் மிதக்கும் சந்தோஷத்தில் உள்ளார். அந்த காரில் இல்லாத சொகுசு வசதிகளை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com