நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு நடிகர் பார்த்திபன் மீண்டும் தாதாவாக நடிக்கிறார்.
நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு நடிகர் பார்த்திபன் மீண்டும் தாதாவாக நடிக்கிறார்.
தஞ்சாவூரிலிருந்து ஒரு தலைமுறைக்கு முன்னால் பெங்களூரில் ஒரு குடும்பம் குடியேறுகிறது. மகிழ்வுடன் வாழ்ந்து வந்த அந்த குடும்பத்தின் தலைவன் அங்குள்ள மார்க்கெட்டின் தாதாவாக மாறுகிறான்.
அவனுக்கு வயதாகிறது. இதை பயன்படுத்தி தாதாவாக பலர் முயல்கின்றனர். அதனால் தனது மகன் பார்த்திபனை அழைத்து இந்த நிலைமைக்கு வர நான் கடுமையா உழைச்சிருக்கேன். அவ்வளவு சீக்கிரம் தாதா பட்டத்தை விடக் கூடாது. "இந்த
மார்க்கெட்டுக்கு இன்னிலிருந்து நீ தான் "தாதா " என்று மகனிடம் கூறுகிறார் தந்தை.
தந்தை சொல்லை வேத வாக்காக எடுத்துக் கொண்டு களம் இறங்குகிறார் பார்த்திபன் . தனது தந்தைக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்றவும் தாதா பட்டத்தை கைப்பற்றவும் நடக்கும் போராட்டம் தான் கே.ஆர்.மார்க்கெட் C/O தீனா " படம். இப்படி கதையை சொன்ன இயக்குனர் சந்தோஷ், கதை எழுதி விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து இதை தனது இரண்டாவது படமாக இயக்கி உள்ளதாக கூறினார்.
ஏ.யு.பிக்சர்ஸ் சார்பில்" கே.ஆர்.மார்க்கெட் C/O தீனா" என்ற அடிதடி மசாலா படத்தை ஸ்டுடியோ உரிமையாளரான கே.ராமு தயாரித்துள்ளார்.
பார்த்திபன், சரத்யோகித், ஷாலி மூவருடன் அருண், அஜய், சார்வியா மூவரும் அறிமுகமாகின்றனர்.
நாகேஷ். வி.ஆச்சார்யா கேமராவையும், அனுப்செலின் - முஜிப் ரகுமான் இருவரும் இசையையும், மணிஅமுதவன் பாடலையும், சாந்தகுமார் வசனத்தையும், "அல்ட்டிமேட் " சிவா சண்டை பயிற்சியையும், மதன் - நளினி இரட்டையர் நடன பயிற்சியையும் கவனிக்கின்றனர்.