ஹைதராபாத்தில் நடிகர் விஷால் நிச்சயதார்த்தம்…

ஹைதராபாத்தில் நடிகர் விஷால் நிச்சயதார்த்தம்…
ஹைதராபாத்தில் நடிகர் விஷால் நிச்சயதார்த்தம்…

செல்லமே படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி சண்டகோழி, தாமிரபரணி, திமிரு, இரும்புதிரை என பல ஆக்‌ஷன் வெற்றிப் படங்களில் நாயகனாக நடித்தவர் விஷால்.

செல்லமே படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி சண்டகோழி, தாமிரபரணி, திமிரு, இரும்புதிரை என பல ஆக்‌ஷன் வெற்றிப் படங்களில் நாயகனாக நடித்தவர் விஷால். இவர் நடிப்பில் தற்போது அயோக்யா படம் ரிலிஸுக்கு தயாராகி வருகிறது. 

விஷால் தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார். மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் திகழும் இவர் சமீபத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தார். 

அதன்படி விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் வருகிற 16ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நடிகர் விஷால் தனது திருமணம் சென்னையில் கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டிடத்தில் தான் திருமணம் நடக்கும் என கூறியது குறிப்பிடத்தக்கது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com